Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாகனங்களின் விற்பனை 22 சதவீதம் அதிகரிப்பு

வாகனங்களின் விற்பனை 22 சதவீதம் அதிகரிப்பு

பண்டிகைகளை முன்னிட்டு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு அதிகளவில் வாகனங்களை அனுப்பி வைத்ததே இந்த எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் கடந்த செப்டம்பரில் கார்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகரித்து 4 லட்சத்து 55 ஆயிரம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.

நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு அதிகளவில் வாகனங்களை அனுப்பி வைத்ததே இந்த எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தரவுகளின்படி, செப்டம்பரில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 13.5 சதவீதம் அதிகரித்து 24 லட்சத்து 6 ஆயிரமாகவும், 3 சக்கர வாகனங்களின் விற்பனை 16 சதவீதம் உயர்ந்து 98 ஆயிரத்து 162 ஆகவும் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதமான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், பயணிகள் வாகன விற்பனை 28.3 சதவீதம் அதிகரித்து 26 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

இதே காலத்தில் வர்த்தக வாகன விற்பனை 23.8 சதவீதம் உயர்ந்து 5 லட்சத்து 64 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும், இருசக்கர வாகன விற்பனை 17.6 சதவீதமும், 3 சக்கர வாகன விற்பனை 26.3 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.

குறிப்பாக, எஸ்யுவி எனப்படும் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அமோக வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் மட்டும் இந்த வகை வாகனங்களின் விற்பனை 31.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தற்போது நாட்டில் விற்பனையாகும் ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்களில் சுமார் 68 சதவீதம் பயன்பாட்டு வாகனங்களாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதிய வரி அமலுக்கு வரும் வரை வாடிக்கையாளர்கள் பலரும் வாகன வாங்குதலைத் தள்ளிப்போட்டனர். இதனால் அப்போது விற்பனை மந்தமாக இருந்தது. 

அந்த ஆண்டின் குறைந்த அடிப்படை அளவே நடப்பாண்டில் வளர்ச்சி விகிதம் இவ்வளவு அதிகமாக தோன்றுவதற்கு மற்றொரு முக்கியக் காரணமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி
IDBI Bank strategic transaction to close by fiscal end after RBI clearance: DIPAM Secretary
அடுத்த செய்தி
PMKISAN திட்டத்தில் 77,864 விவசாயிகளுக்கு கவுரவ நிதி

தொடர்புடைய செய்திகள்